பெரும் அளவிலான ரசிகர்கள் பார்க்கப்படும் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, எதிர்பாராத சீரியல்கள் முன்னிலை பெற்றுள்ளது.

டி.ஆர்.பி. ரேட்டிங்

வாரம், வாரம் வியாழக்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் சீரியல்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில், நேற்று சின்னத்திரை சீரியல்களுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது.

சன் டிவி (5)

  1. மூன்று முடிச்சு
  2. சிங்கப்பெண்ணே
  3. கயல்
  4. மருமகள்
  5. எதிர்நீச்சல் தொடர்கிறது

விஜய் டிவி

  1. சிறகடிக்க ஆசை
  2. அய்யனார் துணை
  3. பாண்டியன் ஸ்டோர்ஸ்-2
  4. சின்ன மருமகள்
  5. சிந்து பைரவி

சரிவில் “அய்யானர  துணை” சீரியல்

விஜய் டிவியில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த “அய்யனார் துணை” சீரியலை 2ம் இடத்திற்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளது, “சிறகடிக்க ஆசை” சீரியல்.

அதேபோல, சன் டிவியின் “எதிர்நீச்சல் தொடர்கிறது” சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்து, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.