ஏரல், ஜூலை 26–
பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, அன்று இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன:
- ஆகஸ்ட் 4: இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் சுவாமி வலம் வருதல்.
- ஆகஸ்ட் 5: இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரத்தில் வீதி உலா.
- ஆகஸ்ட் 11 வரை: தினமும் பல்வேறு சப்பரங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சிகள்:
- ஆகஸ்ட் 12: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்று பகல் 1.30 மணிக்கு சாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சியும், மாலை 5 மணிக்கு இலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலமும், இரவு 11 மணிக்கு கற்பகப் பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
- ஆகஸ்ட் 13: அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
- ஆகஸ்ட் 14: காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியாக பொருநை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
விழிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

More Stories
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்த சென்னை பக்தர் மரணம்: அரை மணி நேரம் நடை அடைப்பு
தென் மாநிலங்களை தண்டிப்பதா? – உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்துக்கு முதல்வர் விஜய் எதிர்ப்பு…
சிவ்தாஸ் மீனா ராஜினாமா : நேர்மையான அதிகாரிகளை தவெக அரசு பதவி விலக கட்டாயப்படுத்துகிறது: