சென்னை:
தமிழக அரசுக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), முத்திரைத்தாள் பதிவு கட்டணம், விற்பனை வரி, ஆயத்தீர்வை வரி மற்றும் மத்திய அரசின் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழகத்தின் மொத்த வரி வருவாய் ரூ.64,944.97 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கையின் தற்காலிக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.63,755.70 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.1,189.27 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் மத்திய அரசின் மானியமும், வரிப் பகிர்வும் சற்று குறைந்தபோதிலும், ஒட்டுமொத்த வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய் விவரங்கள்:
- நேரடி வரிகள் மூலம்: ரூ.60,061.72 கோடி
- வரி அல்லாத இதர வருவாய்: ரூ.3,172 கோடி
- மத்திய அரசு மானியம்: ரூ,1,710 கோடி
கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், அப்போதைய காலகட்டத்தில் வரிகள் மூலம் ரூ.56,366.76 கோடியும், வரி அல்லாத வருவாயாக ரூ.2,895.70 கோடியும், மத்திய அரசு மானியமாக ரூ.4,493.23 கோடியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!