September 10, 2026

சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியிலிருந்து சேகரிக்கக்கூடிய குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து காரணமாக குப்பைகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து கரும்புகை சூழ்ந்தது. இந்த கரும்புகையானது ஒரு விண்ணை முட்டக்கூடிய அளவில் இருந்தது. இந்த தீ விபத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குப்பை கிடங்கின் அருகில் அரசு மருத்துவமனை, நகராட்சி பள்ளிகள் அமைந்திருப்பதன் காரணமாக இந்த தீயை அணைக்க அருகில் உள்ளவர்கள் முற்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் தீயணைப்பு துறையினர் வராததான் காரணமாக பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகினர்.

இந்த தீயை அணைக்கும் முயற்சியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்பு பணிகள் தாமதம் ஆனதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து இந்த குப்பையில் ஏற்பட்டுள்ள தீயை, அணைக்கும் முயற்சியில் தற்போது தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed