September 10, 2026

ரூ.5.29 கோடி வங்கி மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர், தனியார் நிறுவன அதிபருக்கு 7 ஆண்டு சிறை …

வங்கி மோசடி வழக்கில் முன்னாள் வங்கி நிர்வாகி, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணி கிளையில் மூத்த மேலாளராக இருந்த தீபக் வி மேனன் என்பவருக்கு சிபிஐ நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 65,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஸ்ரீ சாஸ்துரு அசோசியேட்ஸ் காடன்தெட்டி என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பி சிவகணேசன் என்பவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1,17,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு 26,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2006-2007 காலத்தில் மோசடியான, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 28 வீட்டு வசதிக் கடன்களுக்கு அனுமதி அளித்தது இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகார் அடிப்படையில் 2009 ஏப்ரல் 29 அன்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது 2010 நிலவரப்படி கடன் நிலுவையின் மதிப்பு 5 கோடியே 29 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும், மரணமடைந்ததால் வழக்கிலிருந்து விலக்கப்பட்ட எஸ் வைத்தியநாதன் என்பவருக்கும் எதிராக 2010 ஜூன் 30 அன்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

You may have missed