September 10, 2026

மும்பை ஓட்டலில் அதிரடி சோதனை; பாலியல் தொழிலில் ஈடுபட்ட நடிகை கைது…

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஓட்டலில் பெண் வக்கீல் ஒருவர் பாலியல் தொழில் நடத்தியது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சாதாரண உடையில் வாடிக்கையாளர்கள் போல சென்று சோதனை நடத்தினர். சுமார் 3 மாதங்களாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அந்த பெண் வக்கீலை போலீசார் கைது செய்தனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை குறிவைத்து அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அப்போது பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அதேபோல் மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மகாராஷ்டிர சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் பெங்காலி படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் மற்றொரு நடிகை என 2 பேர் மீட்கப்பட்டனர். இந்த கும்பலை இயக்கிய மேக்கப் கலைஞராக பணியாற்றும் இடைத்தரகர் ஒருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட நபருக்கு பல்வேறு சினிமா பிரபலங்களுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. நடிகை உள்ளிட்டோரை மீட்டுள்ள போலீசார், இந்த விவகாரம் குறித்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed