September 10, 2026

அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க.. இயக்குநர் பாக்யராஜ் உடல் தகனம்!

தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது.

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர்.

நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள வீட்​டிலிருந்து இன்று காலையில் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் பொதுமக்கள் பாக்யராஜின் உடலுக்கு மலர்களை தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர் இருந்தனர்.

பெசன்ட் நகர் மின் மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடலுக்கு இறு​திச் சடங்​கு​கள் நடை​பெற்றன. அவரின் இறுதி சடங்கில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜின் உடலுக்கு அவரது மகன் சாந்தனு இறுதி சடங்குகளை செய்தார். அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் நேற்று (ஜூன் 27) காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்​.பி.க்​கள் கனிமொழி, டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி, இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன், சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

You may have missed