சென்னையில் கபடி வீராங்கனை பாலியல் வன்கொடுமை: பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு!!

சென்னை: சென்னையை அடுத்த கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜு மீது, 17 வயது வீராங்கனை ஒருவர் அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2025 பஹ்ரைன் ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனையின் பயிற்சியாளரான ராஜு, தன்னிடம் பயிற்சி பெறும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக செம்மஞ்சேரி அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

“ஆசைக்கு இணங்கினால் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிப்பேன்” என மிரட்டி, தாய், தந்தை இல்லாத 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆளில்லாத நேரத்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்று மூன்று முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் மேலும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் சிறுமிகளை மட்டுமே அணியில் சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் கண்ணகி நகரில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்டதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. கல்வியிலும் விளையாட்டிலும் முன்னேறி வரும் கண்ணகி நகர் பகுதியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது