லிவ்-இன் உறவை எதிர்த்த பெற்றோர், தங்கையை கொன்ற மகள்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சீகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான சோமசுந்தர். இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி முத்துலட்சுமி மற்றும் 19 வயதான மகள் சுப்ரியாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரவில் மூன்று பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டுள்ளது.

சிறிது நேரத்தில் இளம்பெண், தனது பெற்றோருடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கே.ஆர்.புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சோமசுந்தரத்திற்கு மூத்த மகள் ஒருவர் உள்ளது தெரியவந்தது. அவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதை அறிந்த பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாத இளம்பெண், தனது காதலனுடன் இரண்டு மாதங்களாக தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் – மனைவி போன்று வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் சோமசுந்தரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மகளுக்கும், பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த காதல் ஜோடி, சோமசுந்தர் மற்றும் அவரின் மனைவி, மகளை குத்திக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.  மேலும், இந்த சம்பவத்திற்குப் பின் காதல் ஜோடி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். எனவே, சந்தேகத்தின்பேரில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.