சிவகங்கை மாவட்டம் அருகேயுள்ள மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே காலில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆகாஷின் உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், 102 நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் மதுரை தத்தனேரி மயானத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, விசாரணைக்காக சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பல காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, பின்னர் இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காவல்துறைக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு தற்போது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிபிசிஐடி போலீஸார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 6 காவல்துறையினர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த 6 பேருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் திலீபன் ( திருப்புவனம் காவல்நிலையம்) உதவி ஆய்வாளர் குகன் (மானாமதுரை காவல்நிலையம்) மற்றும் காவலர்கள் காளீஸ்வரன், பழனி, தெய்வேந்திரன், மகேந்திரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

More Stories
செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்…
திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்; பெயின்டர் கைது…
நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓ: வெளுத்து வாங்கிய சகோதரர்…