டெல்லியில் ஐஎஸ்ஐ ஆதரவு தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் கேங் பஸ்ட் 2.0என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தானை தளமாக கொண்ட குற்றவாளி ஷாஜத் பாட்டி கும்பலுடன் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

More Stories
திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை…
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூடியூபர் பண மோசடி புகார்..
“முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால், தவெகவில் இணைந்தேன்”