தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாள ராகப் பணிபுரியும் பத்மாவதி, புதிய மின் இணைப்பு வழங்க ஜிபே மூலம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் புதிய மின் இணைப்பு தாமதமாவது குறித்துக் கேட்டபோது, செலவுகள் இருப்பதாகக் கூறி அதிகாரி பத்மாவதி பணம் கேட்டுள்ளார். வீடியோவில் அவர், “மற்ற அதிகாரிகள் போல நான் பவரை கையில் வைத்துப் பேசமாட்டேன். என் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளைப் பார்க்கச் செல்ல பணம் வேண்டும்” என்று லஞ்சத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
விண்ணப்பதாரர் “கையில் ரூ.1,500 தான் உள்ளது, ஜிபே செய்யவா ?” எனக் கேட்க, “பணம் கொடுத்தால் 10 நாட்களில் மின் இணைப்பு வரும்” எனக் கூறி அதிகாரி லஞ் சத்தைப் பெற்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி பத்மாவதி மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்