டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்த தற்போதைய முதல்வர் விஜய், கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, “பாட்டிலுக்கு 10 ரூபாய்” என குற்றம்சாட்டி பிரசாரம் செய்திருந்தார். அது பெரிய அளவில் பேசுபொருளாகியிருந்தது. எனினும், தற்போதைய தவெக ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்தசூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூடுதல் தொகையை வசூலிக்க கூடாது எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இதைத்தொடர்ந்து எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்கும் கடைக்காரர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும், இது சம்பந்தமாக இமெயில் மூலம் புகார் வந்ததையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, கடந்த 20 நாட்களில் மட்டும் கூடுதல் விலையை வசூலித்த 200க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு