பொள்ளாச்சியை மிஞ்சும் சேலம் கொடூரம்… சிக்கிய வீடியோ ஆதாரங்கள்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி, புத்தூர், அஹ்ரகாரம் பகுதியில் வசித்து வரும் மக்களின் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் நகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அஹ்ரகார பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் மணிகண்டனின் கடையில், குட்கா, பான்பிராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பள்ளி மாணவர்கள் முதல் பலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது. மேலும், மணிகண்டன் பல பெண்களை ஏமாற்றி, மிரட்டி, பணத்தாசை காண்பித்து பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார். தனிமை காட்சிகளை பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலிலும் தள்ளி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு பெண்களுடன் மணிகண்டன் இருக்கும் வீடியோவை பெண்-டிரைவில் இணைத்தும் கொடுத்துள்ளனர். பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த மணிகண்டனின் மிரட்டலுக்கு பயந்து யாரும் வெளியே சொல்வதில் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவரின் செல்போனில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வீடியோ இருப்பதாகவும், மொத்தமாக இதுவரை 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே, பெண் ஒருவர் பேசும் ஆடியோவும் வெளியானது. இந்த ஆடியோவில் மணிகண்டனின் செயல்பாடுகள் தெரிவிக்கப்பட்டு பெண் குமுறி இருக்கிறார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண், குடும்ப சூழ்நிலை காரணமாக வட்டிக்கு வேறொரு பெண்ணிடம் கடன் வாங்கி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சாலையில் அழுதபடி நின்ற பெண்ணை, மணிகண்டன் ஆறுதலாக இருப்பதாக நடித்து பேச்சுக்கொடுத்துள்ளார். பின் தனக்கு தெரிந்த பைனான்சியர் மூலமாக உதவி செய்வதாக கூறி செல்போன் நம்பரை வாங்கியவர் ஓமலூர், மேட்டூர் பகுதிக்கு வரவழைத்து பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். பெண் சென்று வரும்போது பணமும் கொடுத்துள்ளார். ஒருமுறை ஓமலூரில் இருக்கும்போது செல்போனை பெண் பார்த்த நிலையில், அதில் சுமார் 8000 வீடியோக்கள் இருந்துள்ளது. பெண்ணுடன் மணிகண்டன் பேசிய விடியோவும் இருந்துள்ளது. 

இதனால் மேற்படி பெண் எதுவும் தெரிவிக்காமல் மணிகண்டனிடம் இருந்து விலகிய நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக தொடர்பு கொண்ட மணிகண்டன் தன்னைப்போல எனது நபர்களிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினார். என்னைப்போல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை வேண்டும். காவல்துறைக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியும் பலனில்லை. இதனால் இதுதொடர்பான தகவலை வெளியே பகிர்கிறேன் என ஆடியோவில் பெண் பேசி இருக்கிறார். இதனையடுத்து, மணிகண்டனை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தபோது, 3 பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த வீடியோ இருந்துள்ளது. ஒரு பெண் நிர்வாணமாக வீடியோ கால் பேசும் காட்சியும் இருந்துள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்குப்பின் மணிகண்டனுக்கும், தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சேலம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.