கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அடுத்த அனகோடி கிராமத்தைச் சேர்ந்த மங்கம்மாள் என்பவருக்கு 62 சென்ட் நிலம் உள்ளது. மங்கம்மாள் நிலத்தில் புகுந்து நெற்பயிர்களை மாடுகள் சேதப்படுத்தியதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மஞ்சுநாதன் (35), வருண்குமார் (25), தேவகுமார் (49), கௌதம் (23) உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி 9 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம் செய்தனர்.
தாத்தாவிடம் சண்டை போட்டதை எதிர்த்து கேட்ட மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. 9 பேர் மிரட்டியபோது மாணவி தனது செல்போனில் வீடியோ எடுத்ததை அடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மாணவியை கத்தியால் தாக்கி மஞ்சுநாதன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மாணவி தாய் பேசுகையில்; தன் மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 3ம் தேதி புகார் தந்த நிலையில் 10 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு