தங்கும் விடுதிக்குள் நுழைந்து இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயற்சி: சுகாதார துறை ஊழியர் கைது….

விடுதியில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற சுகாதார துறை ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். பெருங்குடி மண்டலம், 184வது வார்டில் சுகாதார துறை சார்பில், வீடுகள்தோறும் கொசு மருந்து அடிக்கும் பணியில் சரவணன் (30) என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கந்தன்சாவடி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்த 29 வயது இளம்பெண் அவரது விடுதியில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது, கொசுமருந்து அடிக்க விடுதிக்கு சென்ற சரவணன் இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்து அதை அவரது செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, குளிக்கும் அறையில் செல்போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்த அந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். இளம்பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதும் விடுதியில் இருந்த சக பெண்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுகாதார துறை ஊழியரை மடக்கி பிடித்து துரைப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இளம்பெண் அச்சத்தால், புகார் அளிக்க மருத்த நிலையில், பொதுமக்கள் பிடித்து கொடுத்ததை தொடர்ந்து போலீசாரிடம் புகார் பெற்று சுகாதாரத்துறை ஊழியர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விடுதிக்கு கொசு மருந்து அடிக்கடி சென்ற சுகாதாரத்துறை ஒப்பந்த ஊழியர் இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்து அதை வீடியோ எடுக்க முயன்ற சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.