டிஆர்ஐ அலுவலக காவலாளியை கட்டிப்போட்டு கார் கண்ணாடியை உடைத்து ஆவணங்கள் கொள்ளை…

சென்னை டிஆர்ஐ அலு​வல​கத்​தில் நள்​ளிர​வில் காவலா​ளியைக் கட்​டிப்​போட்டு கார் கண்​ணாடியை உடைத்து ஆவணங்​கள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டன. இந்த விவ​காரத்​தில் கூலிப்​படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தி.நகர், ஜி.என்​.செட்டி சாலை​யில் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகம் (டிஆர்ஐ) இயங்​கு​கிறது. தங்​கம் கடத்​தல் தொடர்​புடைய 2 பேர் சமீபத்​தில் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட வாக​னம் ஒன்று இந்த அலு​வல​கத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டது.

இந்த கடத்​தல் வழக்​கில் சர்​வ​தேச கடத்​தல் கும்​பலின் தொடர்பு உள்​ளதா என தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மேலும் இந்த வழக்​கில் முக்​கிய நபர்​களும் சிக்கி இருந்​தனர். பறி​முதல் செய்​யப்​பட்ட காரில் முக்​கிய ஆவணங்​கள் இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. இதை சம்​பந்​தப்​பட்ட கடத்​தல் கும்​பல் கொள்​ளை​யடிக்க திட்​ட​மிட்​டது.

அதன்​படி, கேரளாவைச் சேர்ந்த கூலிப்​படை​யினர் கடந்த 31-ம் தேதி நள்​ளிரவு தி.நகரில் உள்ள டிஆர்ஐ அலு​வலக வளாகத்​துக்​குள் முகமூடி அணிந்து நுழைந்​தனர். அவர்​கள் காவலா​ளி​யான ஜான்​கென்​னடியை தாக்கி, வாயில் துணி​யைத் திணித்​து, கை கால்​களை கட்டினர்.

பின்​னர் கூலிப்​படை காரின் கண்​ணாடியை உடைத்து அதிலிருந்த ஆவணைங்​களை கொள்​ளை​யடித்​து​விட்டு தப்​பியது. மறு​நாள் காலை அலு​வல​கம் வந்த பணி​யாளர்​கள் இதுகுறித்து தேனாம்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் விரைந்து வந்து காவலா​ளியை மீட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இந்த கொள்ளை தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக டிஆர்ஐ அலு​வல​கம் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள சிசிடிவி கேமரா பதிவு​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

இதில் கூலிப்​படையைச் சேர்ந்த புதுச்​சேரி காரைக்​காலில் வசிக்​கும் டிஜிட்​டல் மார்க்​கெட்​டிங் வேலை செய்​யும் அப்​துல் ஹாடி (24), கேரளாவைச் சேர்ந்த ஜிம் மாஸ்​டர்​கள் அனூப் (33), ஆதித்​யன் (20), சிம்​லால் (53) ஆகிய 4 பேர் கொள்​ளை​யில் ஈடு​பட்​டது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த இந்த 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இதில் தொடர்​புடைய மேலும் சிலரை​யும் கூலிப்​படையை ஏவி விட்​ட​வர்​களை​யும் தனிப்​படை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்