சென்னை, மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் 147 வது வார்டு கங்கா நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அதன் நிர்வாகி குணசேகரன் என்பவர் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. அந்த தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. சனிக்கிழமை இரவு முதல் இதற்கான ஏற்பாடுகளில் தவெக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் திமுக 147 வது வார்டு வட்டச் செயலாளர் மாதவன் வீடு அருகில் இருப்பதாகல், அப்பகுதியில் தாங்கள் தான் தண்ணீர் பந்தல் அமைப்போம் என கூறி திமுக தொண்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதனால், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது சற்று நேரத்தில் அந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக முற்றி இருதரப்பினருக்கு இடையே மோதலாக வெடித்துளள்து. ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு மோதலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் திடீரென பதற்றம் ஏற்பட்டது.
இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகி குணசேகரன் மற்றும் திமுக வட்டச் செயலாளர் மாதவன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்படும் இடத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More Stories
ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி கைது…
கணவன் என்று பொய் சொல்லி அட்மிட்… சிசிடிவியால் அம்பலமான விபத்து நாடகம்:
திருச்சியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை…