திருச்சியில் ரவுடியை மர்ம நபர்கள் சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூ பாஷா. இவரது மகன் பாதுஷா(24). ரவுடி பட்டியலில் உள்ளார். அரியமங்கலம் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் காட்டூர் ஆயில் மில் செக்போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பாதுஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் படுகாயமடைந்து அந்த இடத்திலேயே பாதுஷா துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள், திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பாதுஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அரியமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பாதுஷா ெதாடர்பில் இருந்து வந்தார். இது தொடர்பான தகராறில் கடந்த செப்டம்பர் மாதம் பாதுஷாவை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றனர். அப்போது அரிவாளால் வெட்டியதில் பாதுஷாவின் வலது கையில் 2 விரல்கள் துண்டானது. இருப்பினும் அந்த பெண்ணுடன் பாதுஷா தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஏற்கனவே கொலை செய்ய திட்டமிட்ட நபர்கள் தான் பாதுஷாவை கொலை செய்தனரா, கோஷ்டி மோதல் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியமங்கலம் பகுதியில் ரடிவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி கைது…
கணவன் என்று பொய் சொல்லி அட்மிட்… சிசிடிவியால் அம்பலமான விபத்து நாடகம்:
தண்ணீர் பந்தல் அமைப்பதில் எல்லைப் பிரச்சினை… தவெக-திமுக இடையே வெடித்த மோதல்…