கோவை / சூலூர்:
பல்வேறு நிதி மோசடிப் புகார்களிலும், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் ரகசியக் கண்காணிப்பிலும் இருக்கும் ‘VK Promotion’ நிறுவனம், தங்களது போலி முகத்திரையை மறைப்பதற்காக தற்போது அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேடயமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு நடுநிலைப் பள்ளிக்குள் அப்பட்டமான விதிமீறல்!
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அத்தப்பகவுண்டன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் ‘VK Promotion’ பிரமுகர் வெற்றி மற்றும் அவரது கும்பல் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போல நாடகமாடி, அதை வீடியோ எடுத்து தங்களது போலி நிறுவனத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர்.

முறையான அரசுப் பதிவோ, உரிமங்களோ, நிதி ஆதாரங்களுக்கான ஆவணங்களோ இல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரை, அந்தப் பள்ளியின் ஆசிரியர் பொதுவெளியில் மைக்கில் வாசித்துப் பாராட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பின்னணி விபரங்கள் தெரியாமல் இது போன்ற சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை அரசுப் பள்ளி வளாகத்திற்குள் அனுமதித்து, ஆசிரியர்களே விளம்பரம் தேடித்தரலாமா என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.
கிளை பெயரில் பணம் இழந்தவரின் கண்ணீரை மறைக்கப் பள்ளிக் குழந்தைகள் கேடயமா?
கிளை தொடங்க லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய புகார்கள், பாதிக்கப்பட்ட கிளை உரிமையாளர்களின் ஆடியோ ஆதாரங்கள் மற்றும் ஜியோ நியூஸ் தமிழ் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் இந்த நிறுவனம் சிக்கியுள்ளது. இத்தகு குற்றப் பின்னணி கொண்ட கும்பல், தங்களை நல்லவராக காட்டிக்கொள்ளவும், அடுத்த கட்ட ஏமாற்று வேலைகளுக்கு அடித்தளம் போடவும் அப்பாவி அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது அப்பட்டமான துணிச்சலாகும்.
கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு நேரடிக் கோரிக்கை!
அரசு விதிகளின்படி, எந்தவொரு தனியார் அமைப்போ அல்லது நிதி நிறுவனமோ முறையான கல்வித்துறை அனுமதியின்றி அரசுப் பள்ளிகளுக்குள் நுழைந்து தங்களது பிராண்டிங் அல்லது லோகோக்களை விளம்பரப்படுத்தக் கூடாது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழகக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் ஆகியோர் உடனடியாகத் தலையிட வேண்டும். விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, இந்த நிதி மோசடிக் கும்பலை பள்ளிக்குள் அனுமதித்த சூலூர் அத்தப்பகவுண்டன் புதூர் அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை உடனடியாகத் துறை ரீதியான கடுமையான விசாரணை நடத்தி, சஸ்பெண்ட் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக அமைச்சர் விக்னேஷ்:
மதுரை பூ மார்க்கெட்டில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர்: ரகசியமாக படம் பிடித்து மிரட்டியவர் கைது…
காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்: