தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்த இவரது மனைவி அமுதா (வயது 50), இந்த தம்பதியருக்கு சிவராஜ் என்ற மகனும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி அவர்களது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமுதாவின் அக்காவான கண்ணம்மாவின் (வயது 67) கணவர் மற்றும் ஒரே மகனும் உயிரிழந்து விட்டனர். கண்ணம்மாவிற்கு வேறு பிள்ளைகள் எதுவும் இல்லாததால், அவர் தனது ஒரே சொந்தமான தங்கை அமுதாவின் வீட்டிற்கு வந்து நிரந்தரமாக தங்கி இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், கண்ணம்மாவுக்கும் சிதம்பரத்திற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம், அமுதாவிடம் இருந்து விலகி, அவரது அக்காவான கண்ணம்மாவுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர்கள் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதியில் சிதம்பரமும், கண்ணம்மாவும் ஒரு பகுதியிலும், அமுதா தனியாகவும் வசித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து அமுதாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பாவம் என்று நினைத்ததற்கு அடி மடியிலேயே தனது அக்கா கை வைத்து விட்டார் என்ற ஆத்திரத்தில் அமுதா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் கணவர் சிதம்பரமும் அக்கா கண்ணம்மாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னல் வழியாக அமுதா பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
திடீரென தூக்கத்திலிருந்து எழுந்த சிதம்பரமும் கண்ணம்மாவும் தங்கள் உடல் மீது தீப்பிடித்து எரிந்ததால் இருவரும் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். மேலும் இதுகுறித்து பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் சென்றது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து சிதம்பரம் மற்றும் கண்ணம்மா ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனது கணவரையும், அக்காவையும் கொலை செய்ய முயன்ற போது அமுதாவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து அவரும் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேராவூரணி போலீசார் அமுதாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரையும், அக்காவையும் பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் எரித்துக்கொன்ற சம்பவம் காட்டுத் தியாக பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

More Stories
இட்லி, தோசைக்கு கஞ்சா சட்னி: கஞ்சா தோட்டம் உருவாக்கிய ஐடி மேனேஜர்…
மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி அதிரடி கைது…
சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை …