கடலூர் மாவட்டத்தில் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர், பிளஸ் 1 மாணவர் கைது செய்யப்பட்டனர். கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் நேற்று மதியம் மொபட்டில் அங்குள்ள தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது கடற்கரை பகுதியில் தனியாக அமர்ந்து இருந்தபோது, அங்கு வந்த கடலூர் அருகே ராசாபேட்டை சுனாமி நகரை சேர்ந்த மீனவரான புஷ்பராஜ் (41) என்பவர், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பேச்சு கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று தெரிவித்துள்ளார். இதையடுத்து புஷ்பராஜை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சிதம்பரம் பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மொபட்டில் வீடு திரும்பியுள்ளார். சிதம்பரம் சபாநாயகர் தெரு வைப்புச்சாவடி அருகே அவர் வந்தபோது, பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென அப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அங்கு திரள மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!