கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சூலூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையைத் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இரு ஆசாமிகள் மீது சந்தேகம் வலுத்து உள்ளதால், அவர்களைப் பிடிக்க தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது திடீரென மாயமாகி உள்ளார்.
பொழுது இருட்டாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம், பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்து உள்ளனர். சிறுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், பெரும் தவிப்புடன் தேடி வந்து உள்ளனர். இதனிடையே இன்று காலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரை ஓரத்தில் சிறுமி மர்மமான முறையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர்.
இது குறித்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!