தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு வரும் மே 25 முதல் ஜூன் 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ந் தேதி வெளியானதை தொடர்ந்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து கல்லூரி படிப்பில் சேர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ள நிலையில் விரைவில் கவுன்சிலிங் தொடங்க உள்ளது. அதே சமயம், வினாத்தாள் கசிவு காரணமாக, மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இதனிடையே, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் அந்தந்த பல்கலைகழகங்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் சார்பில் இளநிலை படிப்பில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது,
இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக இளநிலை படிப்புகளுக்காக (BVSc AH / BTech) மாணவர் சேர்க்கை, விண்ணப்பங்கள் பல்கலைக கழக, இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 25-05-2026 முதல் 17-06-2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்வாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள் அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப விதிமுறைகள், மற்றும் இதர விபரங்கள், https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!