சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் நேற்று அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பத்திற்கு காரணம் யார்? என கேட்டனர். ஆனால் சிறுமி சரிவர பதில் கூறாமல் கதறிஅழுதுள்ளார்.
இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பாலக்கோடேரு போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாக்கோடேரு கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடகணேஷ் (26), மகேஷ் (24), போகேஸ்வரராவ் (26), லட்சுமணன்(25). நண்பர்களான இவர்கள் 4 பேரும் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு 4பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்
அப்போது சிறுமியிடம் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. மீறினால் உன்னையும், உனது பெற்றோரையும் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து 4 வாலிபர்களையும் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
குடியிருப்பில் மின்தூக்கி பழுதடைந்ததால் 4 இளைஞர்கள் 90 நிமிடங்கள் சிக்கித் தவிப்பு…
குடும்ப தகராறில் பயங்கரம் கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவர்
தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோயில் திருத்தேர் கவிழ்ந்து விபத்து…