24 மணி நேரமும் டாஸ்மாக்.. எண்டு கார்டு போட்ட அதிகாரி.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ!

சென்னை, திருவொற்றியூர் தேரடி பகுதிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவிற்பதற்கு வரைமுறை எல்லாம் கிடையாது. காலை 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடையை அதிகாலை 5.30 மணிக்கு திறந்து, விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அதற்காக 5 மணியில் இருந்தே குடிமகன்கள் வரிசையில்

இரவு நேரங்களிலும் 10 மணிக்கு மூட வேண்டிய கடையை நள்ளிரவு 2 மணி வரை திறந்து வைத்து மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் தேரடி ஒயின்ஷாப்பிற்கு சென்றால், எந்த நேரமும் சரக்கு கிடைக்கும் என மதுபிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டே தடம் காட்டுவார்களாம். அப்படியொரு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இக்கடையில், ஆட்சி மாற்றத்திற்கும் பின்பும் இதே நிலை தொடர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், டாஸ்மாக் ஊழியர்களான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் மது விற்பனையைக் கண்டும் காணாமல் இருந்து, தடுக்க தவறிய திருவொற்றியூர் காவல் ஆய்வாளரான மோகன்தாஸை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் டெண்டர் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியொரு திடீர் அதிரடி ஆக்‌ஷனால் திருவொற்றியூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.