September 10, 2026

சாலையில் கவிழ்ந்த வேனில் இருந்து சிதறிய குளிர்பானங்கள்…

பூந்தமல்லி அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில தாடாவில் தனியாருக்கு சொந்தமான குளிர்பானம் தொழிற்சாலையில் இருந்து குளிப்பாகங்களை ஏற்றி வந்த வேன் ஒன்று சென்னை வண்டலூர் மிஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக சென்றுள்ளது.

அப்போது அந்த வாகனம் குன்றத்தூர் அருகே கடந்த போது வாகனம் பழுதாகியாது இதனால் அந்த வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி நின்று கொண்டு இருந்து வேனின் மீது மோதியுள்ளது. இதனால் அந்த வேன் தலைக்குப்புற கவிழ்த்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த வேனில் இருந்த சரக்குகள் கீழே விழுந்தன, அதனை அப்புறப்படுத்தும் பணியில் அங்கு இருப்பவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதில் கண்டெய்னர் லாரி ஒட்டி வந்த ஓட்டுனருக்கு உதவியாளருக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது, அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போக்கு வரத்து காவல்துறையினர். இந்த விபத்துக்காரணமாக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அத்தனையும் சீர்படுத்தும் பணியானது நடந்து வருகிறது.

You may have missed