தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் சென்றடைந்தார். தற்காலிக சபாநாயகருக்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தற்காலிக சபாநாயகரை நியமனம் செய்து முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டது. முதல்வர் விஜய், தற்காலிக சபாநாயகராக கருப்பையா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்டம் தவெக சார்பில் சோழவந்தான் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார். இந்த விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும். அதன்பிறகு நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளார். விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் ஆதரவில் தான் மெஜாரிட்டியை பெற்று முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்களில் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை வழிநடத்த சபாநாயகர் ஒருவர் வேண்டும். இதற்காக தான் கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More Stories
தவறை அனுமதிக்கமாட்டேன்னு பகிரங்கமாக சொன்ன விஜய்! நல்ல அறிகுறினு பாராட்டிய சகாயம் ஐஏஎஸ்!
மகளை காதலித்த 2 வாலிபர்களை கொடூர கொன்ற தந்தை…
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் மதுரை கோச்சடை மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை!