திருச்சி கே.கே.நகர் ரங்கா நகரை சேர்ந்தவர் கற்பகநாதன். இவரது மனைவி லட்சுமி(41). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், நான் ஒரு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக, ஏற்கனவே இருந்த கட்டிடத்தை 2வது தளத்தில் வாடகைக்கு எடுத்தேன். அதை புதிதாக வடிவமைக்க திட்டமிட்டேன்.
இதற்காக லால்குடி ஆங்கரை பாலாஜி நகரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் விக்னேஷ் மற்றும் அவர் மனைவி சிவரஞ்சனி ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்தேன். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தின்படி பணிகளை செய்து கொடுக்காமலும், பணிகள் மேற்கொள்வதற்காக கொடுத்த தொகையை திரும்ப தராமலும் மோசடி செய்து விட்டனர். அந்த விக்னேஷ் தற்போது முசிறி தொகுதி தவெக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நான் செலுத்திய பணம் கிடைக்குமா என்று எனக்கு அச்சம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து, என் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கமிஷனர் உத்தரவின் பேரில் கே.கே.போலீசார் விசாரிக்கின்றனர்

More Stories
“நாளைய முதல்வர் எடப்பாடியார்”.. புதுச்சேரி ரிசார்ட்டில் எழுந்த முழக்கம்.. அரண்டு போன தவெக!
திட்டமிட்டப்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!…
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை… 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து : திருப்பதி தேவஸ்தானம்…