சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் முதற்கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் செலுத்திய தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், தனது எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று ஆரம்பகட்ட முன்னிலையில் உள்ளார்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து, முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் இந்தத் தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தபால் வாக்குகளில் அவர் பெற்றுள்ள இந்த முன்னிலை, அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் பின்னரே முழுமையான நிலவரம் தெரியவரும். பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கும், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்று முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன

More Stories
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! விஜய் வீட்டுக்கு பூங்கொத்துடன் வந்த ஜோதிடர்
நாளை வாக்கு எண்ணிக்கை : 22000 போலீசார் பாதுகாப்பு: காவல்துறை தகவல்..
50 ஆண்டுகளாக அதிமுக வெற்றிபெறாத ஒரே தொகுதி…