ஆந்திர மாநிலம் மார்க்காபுரத்தைச் சேர்ந்தவர் சீதாராம்(38), சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ரேணுகா(32). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர். சீதாராம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதனால் அவர் தனது குடும்பத்தை பச்சுபள்ளியில் உள்ள வாடகை வீட்டுக்கு மாற்றினார்.
இந்நிலையில் சீதாராம் ஐதராபாத் ஹுசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து சீதாராமின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ரேணுகாவுக்கு வேறு சிலருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது சீதாராமுக்கு தெரியவந்தது. மேலும் ரேணுகா தனது கள்ளக்காதலர்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து மன வேதனை அடைந்த சீதாராம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்தது.
மேலும் சீதாராம் 19 பக்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர் அதில் சீதாராம் எழுதியிருப்பதாவது: ‘எனது மனைவி ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 பேருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். அவர்களில் ஒருவருடன் தனிமையில் இருந்தபோது ஆபாசமான முறையில் வீடியோக்களை எடுத்துள்ளனர். அவ்வாறு எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்களை ரமணா என்ற நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவற்றை பார்த்த பிறகு நான் எப்படி உயிருடன் இருப்பது?, அப்போது முதல் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அவற்றைப் பார்த்த பிறகுதான் என் மனைவி உண்மையானவள் இல்லை என்பது தெரிய வந்தது.
ஆனாலும் குழந்தைகளின் நலன் கருதி அவளை எப்படியாவது தகாத உறவில் இருந்து காப்பாற்ற முயன்றேன். ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்துவிட்டாள்’ என அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாராம் மனைவி ரேணுகா மற்றும் கள்ளக்காதலர்களான ரமணரெட்டி, ஸ்ரவன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

More Stories
6 வயது சிறுவன் அடித்து கொலை: நரபலியா என போலீஸ் விசாரணை…
காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு தவெகவினர் ரகளை…