மின் கம்பியில் விழுந்த நுங்கை எடுக்க முயன்றபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் உடல் கருகி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் டெல்லி கணேஷ் (17), தட்சணாமூர்த்தி (17). இருவரும், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர். 2 பேரும் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து, அதே பகுதியில் உள்ள பனை மரத்தில் இருந்து நுங்கு அறுப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கு, மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு அறுத்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் மாட்டிக் கொண்ட நுங்கை எடுக்க முயன்றபோது திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியுள்ளது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகே நின்றிருந்த டெல்லி கணேஷ், தட்சிணாமூர்த்தி ஆகிய 2 பேர் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
மதுரை தி ஹானஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு: ரூ. 25,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு சிறை! கொன்னுடுவேன்’னு மிரட்டிய அமைச்சருக்கு பதவி நீடிப்பா? த.வெ.க ராஜகுரு நீக்கத்தால் வெடித்த புதிய சர்ச்சை!