நாகப்பட்டினம் நகரின் மையப்பகுதியான அண்ணாசிலை அருகே மீன்மார்க்கெட் உள்ளது. இதன் அருகே 80 வயதான மூதாட்டி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு கடந்த 9ம்தேதி தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் மூதாட்டியின் முகத்தை நாய் கடித்து சிதைந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நாகப்பட்டினம் வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு (80) என்பதும், அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, அப்பகுதியில் சுற்றித்திரிந்த முதியவரை சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இடையர் தெருவை சேர்ந்த ராமசாமி (65) என்பதும், நாகப்பட்டினம் சட்டையப்பர் வீதியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தங்கி மீன் வியாபாரம் செய்வதும் தெரியவந்தது.
அவர் மீன் வியாபாரம் செய்ய வரும் போது, கொலையான சின்னப்பொண்ணுவிடம் ஏற்பட்ட பழக்கத்தில் அவ்வப்போது இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், சம்பவத்தன்று இரவு சின்னப்பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அதற்கு அவர் ஒத்துழைக்காததால் ஆத்திரத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பெரிய கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார் என்றும், இறந்தது தெரிந்த பின்னர் அவரை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமசாமியை கைது செய்தனர். பின்னர் நாகப்பட்டினம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று ராமசாமியை ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

More Stories
தனிநபர் விமர்சனம் வேண்டாம், தரமான அரசியல் பண்ணுங்க!” — எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி !எக்ஸ்தளத்தில் அறிவுறுத்தல்
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!