கடலூர் மாவட்டம் இந்திர நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி நட்டுபடகு மூலம் ரமேஷ், மனோகர், நாகவேல் ஆகிய3 மீனவர்கள் கடந்த ஜூன் 3ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
அடுத்த நாள் கரை திரும்ப வேண்டியவர்கள் திரும்பாததால் அவர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். கடலோர காவல் படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால அவர்களை பற்றி எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நல்லவடு அருகே இவர்கள் நடுக்கடலில் கடலில் தத்தளிப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். 6 நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர்கள், தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More Stories
2026 தமிழக பட்ஜெட்: புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் – நிதித்துறை செயலாளர் விளக்கம்!
இன்று தாக்கல் செய்யப்படுகிறது தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
தனிநபர் விமர்சனம் வேண்டாம், தரமான அரசியல் பண்ணுங்க!” — எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி !எக்ஸ்தளத்தில் அறிவுறுத்தல்