தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 தேர்தல் தேதிகள்

​தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு தேர்தல் கால அட்டவணை :-

தேர்தல் அறிவிக்கை வெளியீடு: மார்ச் 30, 2026

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6, 2026

வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 7, 2026

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9, 2026

வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 23, 2026

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: மே 4, 2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

வாக்காளர்கள்: சுமார் 17.4 கோடி வாக்காளர்கள் இந்த ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர்.

பதவிக்காலம்: தமிழக சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வரும் மே 10, முடிவடைகிறது.