September 10, 2026

வாவ்…தவெகவிற்கு இது தான் சின்னமா?:வெளியான பரபரப்பு தகவல்!

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை எதிர்த்து அதிமுக, பாஜக களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் முதல் முதலாக களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம், விஜய்யை முதல்வராக்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளது. எனவே, நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சின்னம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய விதிகளின் படி, பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் விரும்பும் 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருந்தது. இதன்படி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஆட்டோ சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் கேட்டிருந்தது. இந்த சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் போன்ற சின்னங்கள் கேட்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may have missed