September 10, 2026

மானாமதுரை : மீண்டும் காவல்துறையினரால் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் – இளைஞரின் உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்

மானாமதுரையில் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரட்டை கொலை சம்பவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், அழகர். ஜெயக்குமார் கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அழகர் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி இரவு ஜெயக்குமார், அழகர் ஆகிய இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மானாமதுரை சியோன் நகரில் உள்ள சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ஜெயக்குமார் மற்றும் அழகரை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெட்டினர். அதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அந்த கும்பல் அவர்களை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இளைஞர்கள் கைது

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர் அதன் பேரில் மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குணா ஆகாஷ் என்ற இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் ஆகாஷ் டெலிஷன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

உயிரிழந்த விசாரணை கைதி

மருத்துவமனை சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்திற்கு காவல்துறை அழைத்து சென்றபோது வழியில் ஆகாஷ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

சாலை மறியல்

இளைஞர் உயிரிழந்த செய்தியை கேட்டு அவரின் பெற்றோர் – உறவினர்கள் ஊர் மக்கள் என “இளைஞர் ஆகாஷை காவல்துறையினர் தான் அடித்துக் கொண்டு விட்டதாக குற்றம்சாட்டினர்”. இதையடுத்து, அவர்கள் மதுரை – இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் Lock-Up நடந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed