September 10, 2026

மசாஜ் சென்டரில் பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் கைது

சென்னை கே.கே.நகரில் உள்ள பி.டி.ராஜன் சாலையில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது.

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள்

கடந்த டிசம்பர் மாதம், அந்த மசாஜ் சென்டருக்குள் பிரபல ரவுடி வைரமணி என்பவர் தனது கூட்டாளிகளுடன் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஒரு பிரபல ரவுடியின் பெயரைக் கூறி, தாங்கள் அவரின் ஆட்கள் என கூறிக்கொண்டு அங்கிருக்கும் இந்த பெண்களையும் தகாத வார்த்தைகளில்  பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது.

ரவுடிகள் கைது

இதையடுத்து மசாஜ் சென்டர் மேலாளர் அளித்த புகாரின், வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், வைரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னை ஷெனாய் நகர், கதிரவன் காலனியைச் சேர்ந்த வைரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான வினோத்குமார், அரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகரிக்கும் ரவுடிகளின் அட்டகாசம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில், ஸ்பா, மசாஜ் சென்டர்களுக்குள் புகுந்து, ரவுடிகளின் பெயர்களை சொல்லையோ! இல்லை அரசியல்வாதிகளின் பெயர்களை சொல்லியோ! மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், இதற்கு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்பா, மசாஜ் சென்டர் உரிமையாளர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

You may have missed