September 10, 2026

பத்மஸ்ரீ விருது வென்ற 5 தமிழர்கள் : புதுச்சேரி சிலம்ப வீரருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

​ பத்மஸ்ரீ விருது வென்ற தமிழர்கள் :-

​இந்த ஆண்டு பல “அறியப்படாத சாதனையாளர்கள்” பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை): பக்தி இசை மற்றும் சைவத் திருமுறைகளை வளர்ப்பதில் இவரது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம் – கால்நடை): கால்நடை மருத்துவத் துறையில் இவரது சிறந்த சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆர். கிருஷ்ணன் (சமூக சேவை): பொது நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக ஆற்றிய பணிக்காக இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை): பாரம்பரிய வெண்கலச் சிற்பக் கலையில் (Bronze Sculptor) கைதேர்ந்தவர்.

திருவாரூர் பக்தவத்சலம் (கலை): கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற மிருதங்க வித்வான். இவரது இசைப் பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபல ,புதுச்சேரி சிலம்ப கலைஞர் பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed