சரத்குமார் அவர்களின் அரசியல் வாழ்க்கை ஏற்ற, இறக்கத்துடன் மட்டுமில்லாமல், அவரை நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆக அமைந்துள்ளது. சொந்த சமூக மக்களிடமே எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

​ஆரம்ப கால அரசியல் (1990-களின் தொடக்கம்)

​சரத்குமார் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். 1996 தேர்தலில் அதிமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு, அவர் தனது பாதையை மாற்றிக் கொண்டார்.

​திமுகவில் எழுச்சி (1996 – 2006)

​1996-ல் திமுகவில் இணைந்த சரத்குமார், அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக உருவெடுத்தார். 1998ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

  • மாநிலங்களவை உறுப்பினர்: 2001-ல் திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக (MP) நியமிக்கப்பட்டார்.
  • செல்வாக்கு: நாடாளுமன்றத்தில் தமிழகப் பிரச்சினைகளுக்காகப் பேசினார். திரைத்துறையில் அப்போது அவர் உச்சத்தில் இருந்ததால், இளைஞர்கள் மத்தியில் அவருக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
  • விலகல்: 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், சில உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் திமுகவிலிருந்து விலகி மீண்டும் தனது மனைவி உடன் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அங்கேயும் சில மாதங்களே நீடித்தார்.

​சமத்துவ மக்கள் கட்சி (2007 – 2024)

​யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற நோக்கில், ஆகஸ்ட் 31, 2007 அன்று மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார்.

அரசியல் சவால்களும் மாற்றங்களும்

​2011ம் ஆண்டு நடைபெறறதே சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தனித்தன்மை: அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்தது. 2021 தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார், ஆனால் அக்கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

​பாஜகவுடன் இணைந்த சமீபத்திய திருப்பம்

​2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சுமார் 17 ஆண்டுகளாகத் தான் கட்டிக்காத்த கட்சியை (AISMK), பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைப்பதாக அறிவித்தார்.​ அப்போது நடிகர் சரத்குமார், “நாட்டின் வளர்ச்சிக்கும், பிரதமர் மோடியின் தலைமைக்கும் வலு சேர்க்கவே இந்த முடிவு” என்று அவர் தெரிவித்தார்.

தற்போது அவர் பாஜகவின் மாநில மற்றும் தேசிய அளவிலான முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

அரசியல் கொள்கை :

காமராஜரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது மற்றும் சமூக சமத்துவம் என்று அரசியல் மேடைகள் தோறும் முழங்கினார்.

நடிகர் சங்கத் தலைவர்

அரசியல் பதியாக இருந்தது அதே நேரத்தில் தென்னிந்தி நடிகர் சங்கத்தின் நிர்வாகியாகவும்; தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

மனைவி போட்டி..

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் சரத்குமார் தனது மனைவி ராதிகாவை போட்டியிட வைத்தார். அவருக்கு 3ஆம் இடமே கிடைத்தது.

வரும் தேர்தலில் போட்டி?

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி சார்பில் தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியில் சரத்குமார் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.