September 10, 2026

“திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி பற்றி அரசியல் பயணம்” – என்னவாகும் அதிமுக எதிர்காலம்?

எடப்பாடி பழனிசாமி பற்றிய ஒரு அரசியல் தொகுப்பை இங்கு காணலாம்.

2017ம் ஆண்டு திடீரென சேலத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன உடன், அனைத்து ஊடகங்களும், அனைத்து தரப்பு மக்களும் யார் இவர்? யார் இவர்? என்று பல கேள்விகளை எழுப்பினார்கள்.

எப்படி இவர் திடீரென்று முதல்வர் ஆனார் என்ற பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் இருந்தன. அதற்கு இன்று வரை தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைக்கவில்லை.

1974 – சேலம் மாவட்டம் கோணேரிப்பட்டி கிளைச் செயலாளர்

1989 -அதிமுகவின் ஜெ.பிரிவில் எடப்பாடி தொகுதியில் வெற்றி (சேவல் சின்னம்)

1990 – சேலம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர்

1999 & 2004 – திருச்செங்கோடு தொகுதியில் தோல்வி (மக்களவைத் தேர்தல்

1998 – திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி (நாடாளுமன்றத் தேர்தல்)

1996&2006 – எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு 2முறையும் தோல்வி.

1991 – சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர், எடப்பாடி தொகுதியில் வெற்றி

2001 – சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. (அப்போது அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது).

2006 – அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்

2011 – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் (எடப்பாடி தொகுதியில் வெற்றி)

2014 – அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர், தலைமை நிலைய செயலாளர், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்.

2016 – பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

2017 – பிப்ரவரி 16ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். ஓ.பின்னீர் செல்வம் ராஜானாமா செய்த பிறகு.

2019 – நாடாளுமன்ற தேர்தல் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி (பாஜகவுடன் கூட்டணி)

2021 – எதிர்க்கட்சித் தலைவர் (எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி)

2021 – ஜூலை 11ம் தேதி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

2023 – மார்ச் 28ம் தேதி முதல் தற்போதுவரை அதிமுகவின் பொதுச் செயலாளர்.

2024 – பாஜக கூட்டணியில் இருந்து விலகல் (நாடாளுமன்ற தேர்தலின் போது)

2026 – சட்டமன்ற தேர்தலில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட  உள்ளார்.

எதிர்மறை விமர்சனங்கள்:

எடப்பாடி பழனிசாமி மீது ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் உள்ளன. சசிகலா அவர்களின் ஆதரவால் அப்போது முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, அதன்பிறகு சசிகலா அவர்களை ஓரம் கட்டி விட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை ஏமாற்றிவிட்டார் என பல விமர்சனங்கள் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு பொதுச் செயலாளரான பிறகு அக்கட்சி சரிவை சந்திக்க தொடங்கி விட்டதாகவும்; இனி அக்கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் மிக குறைந்த தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You may have missed