September 10, 2026

நாடு முழுவதும் வலிமை பெறும் பாஜக :மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக அரசு

கேரள மாநிலம் தலைநகரமான திருவனந்தபுரத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

மகாராஷ்டிராவில் 28 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை, தற்போது பாஜக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றி சாதனை படித்துள்ளது. மொத்தம் உள்ள 227 மகாநகராட்சியின் கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக- 84; ஷிண்டே சிவசேனா 26; அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 2ஐ கைப்பற்றியுள்ளன.

உத்தவ் தாக்கரே சிவசேனா 63, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 1, காங்கிரஸ் 23, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களில் வென்றுள்ளன.

தேர்தல் நடைபெற்ற மொத்தம் 2869 கவுன்சிலர் இடங்களில்- வார்டுகளில் பாஜக மட்டும் 1377-ல் வெற்றி பெற்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 330; காங்கிரஸ் 327; உத்தவ் தாக்கரே சிவசேனா 167; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 151; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 34 இடங்களில் வென்றுள்ளன.

மும்பை மாநகராட்சியை 28 ஆண்டுகளாக தாக்கரேவின் ஒருங்கிணைந்த சிவசேனா கோட்டையாக வைத்திருந்தது. தற்போது சிவசேனா பிளவுபட்டதால், மும்பை மாநகராட்சி பாஜக கூட்டணி வசமாகிவிட்டது.

You may have missed