September 10, 2026

நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

வானில் பறந்து கொண்டிருந்த போது வந்த வெடிகுண்டு மிரட்டலால் எமிரேட்ஸ் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு எமிரேட்ஸ் விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அந்த. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு மெயிலில் மிரட்டல் வந்தது. இதயடுத்து விமான நிலைய அதிகாரிகள் எமிரேட் விமானத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதன் பின் பயணிகளையும்,உடமைகளையும் தனிமைப்படுத்தினர்.

இதன் பின் வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நாய்கள், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். பல மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது. ஆனால், விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You may have missed