திமுக – விசிக இடையே தொகுதி பங்கிட்டு ஒப்பந்தம் முடிவான நிலையில், விசிக-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால், கூட்டணிக்குள் விரிசலா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன

8 தொகுதிகளும் ரெடி

அண்ணா அறிவாயலத்தில் தொகுதி பங்கிட்டு பேசிய வார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக பேச்சுவார்த்தை குழுவோடு 2ஆம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசிகவின் 8 தொகுதிகள் முடிவாகி உள்ளது” என்றார்.

தொகுதிகள் பற்றி முதல்வர் அறிவிப்பார்

மேலும், “திமுக – விசிக இடையே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டது” என திருமாவளவன் தெவித்தார். மேலும் அவர், “எந்தெந்த தொகுதிகள் என முறைப்படி முதல்வர் அறிவிப்பார் என்றும்,  எங்களுக்கு திருப்திகரமாக பேச்சுவார்த்தை இருந்தது.

விருப்பமான தொகுதி கிடைத்துள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய பிறகு முதல்வர் நாளை அறிவிப்பார்” எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.