September 10, 2026

தவெக-வா..? இல்லை தே.ஜ.கூ-யா..? யாருடன் சேர்வது – குழப்பத்தில் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் எந்தப் பக்கம் கூட்டணி சேர்வதில்லை என்று முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக-வா? தே.ஜ.கூ-யா..?

ஒரு பக்கம் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் சேர்வதற்கு செங்கோட்டையன் தரப்பில் இருந்து அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் டிடிவி. தினகரன் தரப்பில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சொல்லி அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனும் எந்தப் பக்கம் செல்வார்கள் என்று இன்னும் ஓரிரு வாரங்கள் தெரிந்துவிடும் என அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பின் ஆதரவாள்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் குறித்து பேசிய தினகரன்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைகிறாரா? என்பது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

“நாங்கள் எல்லோரும் அம்மாவின் (ஜெயலலிதா) வளர்ப்பு பிள்ளைகள். சகோதரர் ஓ.பி.எஸ். அந்த முடிவை எடுக்க மாட்டார் என நம்புகிறேன். என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதற்கு ஓபிஎஸ்சுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணிக்கு சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed