September 10, 2026

விருதுநகர் : விபத்தில் சிக்கிய மான் – துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாலையில் விபத்தில் சிக்கிய உயிருக்கு போராடிய மானை காப்பாற்றிய தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மான்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான் உணவுக்காக சிவகாசி நீரேற்றம் நிலையம் அருகில் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் படுகாயமடைந்தது. உயிருக்கு போராடிய கொண்டிருந்த மான் குறித்து அக்கம் பக்கத்தினர் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உயிருக்கு போராடிய மான்

அதன் பேரில் தீயணைப்பு  நிலைய அலுவலர் செந்தூரப் பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்த ‘2 வயது பெண் மானை’ பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

அதன்பிறகு, சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவித்து வணக்காப்பாளர் கனகராஜ் என்பவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மானை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்

You may have missed