September 10, 2026

ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்… சுனாமி எச்சரிக்கை

ரஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 கி.மீ. ஆழத்தில் (80 மைல்) மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தல் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

You may have missed