April 18, 2026

திமுக,பாஜகவை தவிர எந்த கட்சி வந்தாலும் ஓகே… தவெக திடீர் அறிவிப்பு

பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக, பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்த்து களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் தனித்தும், தவெக தலைவர் விஜய் தனித்தும் களம் காண்பதால் இந்த தேர்தல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக, பாஜகவை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என்று தவெக அறிவித்துள்ளது.

சென்னையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தலைவர் விஜய் மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மனஉறுதி அதிகரித்துள்ளது. பாஜக, திமுகவை தவிர எந்த கட்சி வந்தாலும் அறிவிப்போம். தவெக தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்” என்றார்.