September 10, 2026

தவெகவில் நவ.27-ல் இணைகிறார் செங்கோட்டையன்: நடிகர் விஜய்யுடன் ரகசிய சந்திப்பு?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மூத்த அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். தமிழக சட்டமன்ற உறுப்பினராக 9 முறை வெற்றி பெற்ற செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பிணக்கத்தில் இருந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகியவர்களை 10நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று கெடு விதித்தார். இதையடுத்து அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுடன் சந்தித்து பேசினார். இதனால் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்துடன் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், விஜய்யை அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த ஓபிஎஸ், தனிக்கட்சி தொடங்குவார் என்ற செய்தி வெளியான நிலையில், செங்கோட்டையன் தவெகவில் தஞ்சம் புக உள்ளார் என்ற தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

You may have missed