September 10, 2026

குட் நியூஸ்: ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இனி இருமுடி எடுத்துச் செல்லலாம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விமானத்தில் இனி இருமுடியை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது இருமுடி சுமந்து தான் ஐயப்பனை தரிசிப்பார்கள். விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்யும் போது இருமுடி கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இந்நிலையில், இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் விமானங்களில் இருமுடியை எடுத்துச் செல்லலாம். இந்த சலுகை நவம்பர்.28-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜனவரி 20-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

பக்தர்களின் ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும். ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கை, கண்ணியத்தை உறுதி செய்ய அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

You may have missed